தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள், சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள் ஆகியவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏனென்றால் விழாக்களில் பங்கேற்க வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அவர்களுக்கு ஏற்ற வகையில் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த அடிப்படையில் தற்போது கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதாவது கோனியம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான தேரோட்ட விழாவின் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து பூச்சாட்டு விழா நடைபெற்றது. அதன்பின் பிப்ரவரி 23ம் முதல் 28 வரை தினசரி ஒரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதுமட்டுமல்லாமல் மார்ச் 2ஆம் தேதி மதியம் 2:05 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.
ஆகவே இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு (மார்ச்..2) உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்படுமா..? என்று பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக தேரோட்ட நிகழ்ச்சியில் வெளிமாவட்ட மக்கள் பங்கேற்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது கொரோனா தொற்று தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.