புதிதாக தொடங்கப்பட்டுள்ள சரக்கு ரயில் போக்குவரத்து சேவையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு காரைக்குடி பகுதிக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடத்தில் பயணிகள் ரயில் மட்டும் இதுவரை இயங்கிக்கொண்டிருந்தது. இதனால் மாவட்ட ரயில் அமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சங்கத்தினை சேர்ந்த அமைப்புகள் சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் 21 பெட்டிகளில் அரிசியை விழுப்புரம் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து 1,232 டன் ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் சேவை தொடங்கும் போது தலைமை முன்பதிவு கண்காணிப்பாளர் சுகுமாரன், ரயில்வே துறை போக்குவரத்து கண்காணிப்பாளர் பெத்துராஜ், மாவட்ட ரயில்வே சங்க செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்துள்ளனர்.