நெடுஞ்சாலைதுறை ஊழியரை 8 பேர் இணைந்து இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சர்வேயர் காலனி பகுதியில் பழனிவேல்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுபாஷிணி என்பவருக்கும் இடையே குப்பை எரிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பழனிவேல்ராஜன் அப்பகுதியில் இருக்கும் தெருவில் நடந்து சென்றபோது சுபாஷினி உள்பட 8 பேர் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் காயமடைந்த பழனிவேல் ராஜன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பழனிவேல்ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுபாஷினி உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.