ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டை போலவே, மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதன் மூலம் மக்கள் நியாயவிலை கடைகளில் உணவு பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெறுகின்றனர். மேலும் ரேஷன் கடை மூலம் அரசால் வழங்கப்படும், அனைத்து சலுகைகளும் மக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக மத்திய அரசு தற்போது செயல்படுத்தியுள்ள ‘ஒரே நாடு ஒரே அட்டை’ முறையின் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரேஷன் அட்டையில் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் குழந்தைகளின் பெயர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும். அவ்வாறு புதிய உறுப்பினர்களை எவ்வாறு ரேஷன் அட்டையில் சேர்ப்பது என்பதைக் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- குடும்பத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் வந்தால், முதலில் அவரது ஆதார் அட்டையை புதுப்பிக்கவும். பின்பு பெண் உறுப்பினர் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருக்க வேண்டும்.
- ரேஷன் அட்டையில் குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டு தேவை. குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.
- இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த படியே புதிய உறுப்பினர்கள் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
- இந்த வகையில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டில் புதிய பெயர்களை சேர்க்கலாம்.