Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கடத்தலை தடுத்த போலீஸ்….!!

கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை இருசக்கர வாகனத்தோடு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம்மெட்டு சலையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மணி நகரை சேர்ந்த சிவகுமார் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சிவகுமாரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |