Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்கோடி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக தனுஷ்கொடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனுஷ்கொடி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தனுஷ்கொடி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |