பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை செந்தில் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்துள்ளனர். இதனால் செந்தில் மூன்று பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததால் செந்தில் அவர்களை தொடர்ந்து கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வாலிபர்கள் செந்திலை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவர்களான மணிகண்டன், அஜய்குமார், மணி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.