வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுதெங்கால் பகுதியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெயப்பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயப்பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.