சட்டவிரோதமாக 174 புகையிலை பாக்கெட்டுகளை கொண்டு வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐவாஸ்பரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் ராமர், பாண்டியராஜன் என்பதும், சட்டவிரோதமாக 16,000 ரூபாய் மதிப்புள்ள174 புகையிலை பாக்கெட்களை கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்