சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தொழிலாளியான ஜெயகுமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற சமயத்தில் ஜெயகுமார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பிறகு ஜெயகுமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.