Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு ஆகாஷ் வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து அறுந்து கிடந்த மின்கம்பியை ஆகாஷ் எதிர்பாராதவிதமாக மிதித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |