Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “திட்டமிடல் அவசியம்”… மற்றவர்களுக்கு உதவும் போது கவனம்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரரின் நல்ல செயல் பெருமையை தேடிக் கொடுக்கும். இன்று முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபமாக இன்றைய நாள் இருக்கும். எனினும் கவனமுடன் சில விஷயங்களை மேற்கொள்வது நல்லது. நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது ரொம்ப கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |