டிஎன்பிசி குரூப் 2 குரூப் 2ஏ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் மற்றும் தேர்வை நடத்துவது தொடர்பான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படும். அவை முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை ஆகும். நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு மொத்தம் 116 இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு மொத்தம் 5,413 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வரவேற்கப்படுகின்றன. மேலும் அடுத்த மாதம் மார்ச் 23ஆம் தேதி இந்த 5529 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் தங்கள் அடிப்படை விவரங்களை இணையவழி மூலம் நிரந்தர பதிவு (OTR) கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவானது 5 வருடங்களுக்கு செல்லத்தக்கது. இதனைத் தொடர்ந்து வருகிற மே மாதம் 21ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 200 கொள்குறி வகை வினாக்கள் இடம் பெறும் தேர்வானது, காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்க உள்ளது. மேலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.