ஏடிஎம் கார்டில் நான்கு டிஜிட் பின் நம்பர் உருவாக்கப்பட்டதன் காரணம் கூறப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் அட்ரியன் ஷெப்பர்டு போரன் என்ற அறிவியல் அறிஞர் 1969 ஆம் ஆண்டு ஏடிஎம் மிஷினை கண்டுபிடித்தார். அப்போது 6 டிஜிட்டில் தான் ஏடிஎம் பின் நம்பர் உருவாக்கப்பட்டது. ஒரு நாள் ஜான் அட்ரியன் அந்த நம்பரை தன் மனைவியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ இரண்டு இலக்கங்களை சில நேரங்களில் மறந்து விடுவாராம். அவரது மனைவியால் நான்கு இலக்கங்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது.
இதனால் ஏடிஎம் பின் நம்பரை நான்கு இலக்கங்களில் உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது . ஏடிஎம் பின் நம்பர் என்பது மிகவும் முக்கியமானது மற்றும் ரகசியமானதும் ஆகும். அதனால் அந்த நம்பரை யாரிடமும் பகிர கூடாது.ஆனால் ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர் அந்த நம்பரை மறந்து விடக்கூடாது என்ற நோக்கில்தான் மிகவும் எளிமையான முறையில் நான்கு இலக்கங்களில் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏடிஎம் நம்பர் ஒருவேளை பிறருக்குத் தெரிந்து விட்டால் பணத்தை திருடி விடுவார்களோ என்ற அச்சம் இருந்தாலும், இந்த பின் நம்பரை மாற்றிக் கொள்வதற்கான வசதியும் இருப்பதால், அதை அடிக்கடி மாற்றுவது மற்றும் இரகசியமாக வைத்திருப்பதும் நல்லது. மேலும் ஏடிஎம் மிஷினை கண்டுபிடித்த ஜான் அட்ரியன் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.