செங்கோட்டை- கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் சேவைகள் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இடையே இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக மீண்டும் விரைவு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக 18 மாதங்களுக்குப் பின் மீண்டும் செங்கோட்டையிலிருந்து ரயிலில் பயணிக்கும் பயணிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதில் தென் மாவட்டங்களில் ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட புனலூர் கொல்லம் ரயில்வே பாதையில் மின்மயமாக்கும் பணி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இந்த பணிகள் விரைவாக முடித்து விடும் வகையில் செங்கோட்டை- கொல்லம், கொல்லம்- செங்கோட்டை சிறப்பு ரயில்கள் நேற்று முதல் மார்ச் 15 வரையிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.