உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பதற்காக வெளியூர் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் உயிர் பிழைப்பதற்காக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் பதில்களைத் தேடிக் தஞ்சமடையும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பணிநிமித்தம், உயர்கல்வி ,போன்ற காரணங்களுக்காக உக்ரேனில் தங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் நிலை என்னவாகும் என்கின்ற அச்சம் அவரின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் தங்கள் இந்தியா திரும்ப மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வீடியோ பதிவில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் “தொழில்முறை படிப்புகளை பயின்றுவரும் தமிழகத்தை சேர்ந்த 5,000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் குடும்பத்தில் இருந்து தமக்கு நூற்றுகணக்கான அழைப்புகள் வந்துள்ளதாகவும், உடனடியாக உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை இந்திய அழைத்துவரவும், அந்நாட்டு அரசிடம் உயர்மட்ட அளவில் இப்பிரச்சினையை எடுத்துச்சொல்லுங்கள் ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.