தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறந்த ஆசிரியர்களை கண்டறியவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.25,000 காசோலை வழங்கப்படும். விண்ணப்ப படிவங்கள் மற்ற விவரங்களை www.Sciencecitychennai.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 7.03.2022 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.