உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடங்கிய தாக்குதலையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது.
உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் நேற்று அதிரடியாக அந்நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் “உக்ரைன் மீதான இந்த அதிரடி தாக்குதலால்” நேற்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 6 டாலர்கள் அதிகரித்துள்ளது. அதன்படி பீப்பாய்க்கு 94.05 டாலராக இருந்த கச்சா எண்ணை விலை தற்போது 100 டாலரை தாண்டியுள்ளது.