அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான படைகளை குவித்திருந்த புதின் அதிரடியாக அந்நாட்டிற்குள் நேற்று போரை தொடுத்துள்ளார். இந்த செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜெர்மனியின் பிரதமரான ஷோல்ஸ் ரஷ்யா சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து செக் குடியரசின் பிரதமரான பீட்டர் இது ஒரு இறையாண்மை அரசுக்கு எதிரான முற்றிலும் நியாயமற்ற தாக்குதல் என்று கூறியுள்ளார். இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் இன்று சட்டமாக மாறும் என்று கூறியுள்ளார். இதேபோல் பல நாட்டு தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.