மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். இதில் சேட்டிங் மட்டுமில்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ்அப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ்அப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் “வாட்ஸ்அப்” செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு ‘ரியாக்ட்’ செய்யும் வசதியை சோதனை முறையில் (பீட்டா வெர்ஷன்) வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக “வாட்ஸ்அப் வெப்”-ல் வெளியாகியுள்ள இந்த வசதி விரைவில் ஸ்மார்ட் போன் செயலிகளுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் லைக், டிஸ் லைக், ஹார்ட்டின் என பிடித்த வகையில் ரியாக்ட் செய்யலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற செயலிகளில் இந்த அம்சம் உள்ளது.