ரஷ்யாவின் முதல் குறி நான் தான் என்று உக்ரைன் நாட்டின் அதிபர் உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஐநா அமைப்பு, ரஷ்யாவிடம் போரை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது. எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்பிறகு, உக்ரைன் நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யப் படைகள் 200க்கும் அதிகமான தாக்குதல்களை உக்ரைனில் நடத்தியிருக்கிறது. ரஷ்யா மேற்கொண்ட முதல் போரில் தற்போது வரை 137 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாம் நாளாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி கூறியதாவது, ரஷ்யாவின் முதல் இலக்கு நான் தான்.
அவர்களின் இரண்டாம் குறி, என் குடும்பம். உக்ரைன் நாட்டின் தலைமையை அழித்துவிட்டு நாட்டை அழிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். கீவ் நகரத்திற்குள் நாச வேலைகளை செய்யும் குழுக்கள் புகுந்திருக்கின்றன. எனவே அந்நகரத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் அரசு இல்லத்தில் தான் தங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.