Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தங்கம் விலை சவரனுக்கு 1,200 வரை குறைந்தது…. இன்றைய விலை நிலவரம்…..!!!!!

சென்னையில் நேற்று (பிப்..24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 4,827க்கு விற்பனையானது. இதையடுத்து 1 சவரன் ஆபரணத் தங்கமானது நேற்று ரூபாய் 38,616க்கு விற்பனையானது. இதனிடையில் சில்லறை வர்க்கத்தில் 1 கிராம் வெள்ளி ரூ.70.60க்கு விற்பனையானது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று அதிகரித்து இருந்தது. இந்நிலையில் இன்று (பிப்..25) காலை நேர நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.4,801-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து 38,408-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு  ரூ.2.70 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Categories

Tech |