8-ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று(பிப்..25) முதல் பதிவிறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை பெற என்.எம்.எம்.எஸ்., என்ற தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தேர்வு வரும் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வு துறை இணையதளத்தில் இன்று (பிப்..25) வெளியிடப்படும்.
இதனால் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளிகளின் பயனாளர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.