ரஷ்யாவில் உக்ரைனுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் பிரிவினை மக்களை பாதுகாக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக நேற்று பிரகடனம் செய்தார். மேலும் வெளியில் இருந்து இன்று போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால் அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததை விட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை தொடங்கின. இராணுவ கிடங்குகள் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
பல நகரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. தாக்குதலினால் உக்ரைனில் 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டன. இதில் படையின் 11 விமான நிலையங்கள் மூன்று கட்டளைகள் கடற்படைக்கான அடிப்படை மையம் ,எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் ஆகியவை அடங்கும். மாஸ்கோவில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுமார் 340 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியதை தொடர்ந்து ரஷ்ய ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் மக்கள் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். தனக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சீனாவிற்கு வெளியே உள்ள ஒரு தண்டனை காலனியில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.