Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கற்றல்-கற்பித்தல்” சிறப்பு கண்காட்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்…!!

மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் பாடம் கற்பிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான  கண்காட்சி நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து இல்லம் தேடி கல்வி அமைப்பினர் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இந்த கண்காட்சியில்  மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பாடங்களை எளிதாக கற்றுக்கொள்வதற்கான பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுனில்லால் தொடங்கி வைத்துள்ளார்.  இந்த கண்காட்சியில் ஜெயலட்சுமி, டெய்சி, அருணா, ராஜேந்திரன் போன்ற பயிற்சி ஆசிரியர்களும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சியில் பயிற்சி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |