Categories
உலக செய்திகள்

#JUSTIN: நாங்களும் பதிலடி கொடுப்போம்…. 800 ரஷ்ய வீரர்கள் மரணம்…..!!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று அதிகாலை அதிரடியாக உத்தரவிட்டார்.

இதையடுத்து ரஷ்ய ராணுவம் உக்ரைனின் தலைநகரான கீவ், டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், கார்கிவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் குண்டுமழை பொழிந்தது. கடல்வழி, தரைவழி, வான் வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. ராணுவ தளங்கள், விமான நிலையங்கள், கட்டிடங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி செல்கின்றனர். மேலும் குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள், 130 கவச வாகனங்கள், 30க்கும் மேற்பட்ட டாங்கிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது..

Categories

Tech |