சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் குமார் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் குமார் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் ஹரிஷ் குமாரை காப்பாற்ற இயலவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஹரிகுமாரின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினரின் சிறுவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.