Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவர்…. அதிகாரியின் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் பரபரப்பு…!!

அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக அரசு மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை உத்தமர் காந்தி சாலையில் கடந்த புதன்கிழமை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் நடனமாடி கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அந்த வாலிபர் தொடர்ந்து அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்த அரசு மருத்துவர் சத்யபிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சத்ய பிரகாஷ் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவ கல்வி இயக்குனர் சத்யபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |