தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் கடுமையாக தாக்குதல் நடத்தி அவரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வட சென்னை கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் டில்லி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.