திமுக பிரமுகரை அரை நிர்வாணப் படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 21 ஆம் தேதி இரவு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் இருக்கும் எங்கள் வீட்டில் சட்ட விரோதமாக நுழைந்த காவல்துறையினர் எந்த காரணத்தையும் கூறாமல் எனது தந்தையை கைது செய்ய முற்பட்டனர் என அவர் கூறினார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு முதல் தகவல் அறிக்கையை காண்பித்ததாகவும் வழக்கறிஞர் வரும்வரை கூட போலீஸார் காத்திருக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு லுங்கியுடன் இருந்த தனது தந்தையை வேஷ்டி கட்ட கூட அனுமதிக்காத காவல்துறையினர் தன்னுடைய தந்தை மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன் என கூறியதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். சபாநாயகராக இருந்த அவருக்கு குறைந்தபட்ச மரியாதை கூட கொடுக்காமல் இவ்வாறு நடந்து கொண்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.