Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர்  ஸ்டாலின் கூறியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா மீது போரை தொடங்கியுள்ளது. அங்கு தமிழக மாணவர்கள் உட்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனில் வான்வெளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க முடியவில்லை. மாற்று வழியாக உக்ரேனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து, அதன் பின் கத்தாரில் இருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வர வெளியுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளால் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று காலை 10 மணி வரை தமிழக மாணவர்கள் 916 பேரை தமிழக அரசை தொடர்பு கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |