நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்ரிக்காண சில சரியான காரணங்களும் உள்ளன. சில தவறான காரணங்களும் உள்ளன. அதாவது திமுக, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் மற்றும் ஆட்சி பலம் போன்றவை அதன் வெற்றிக்கு ஒரு முக்கிய முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
குறைவான இடங்களே கிடைத்தாலும் அவற்றில் வெற்றி பெற்று தாமாகா தன்னுடைய பெரும்பான்மையை காண்பித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி கண்டது தற்காலிகம் தான். இருப்பினும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமாகாவிற்கு வாக்களிக்க வாக்காளர் பெருமக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.