உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு நாளும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனிடையே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்குரிய கலால் வரியை சிறிது குறைந்திருந்தது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.
எனவே, சென்னையில் பல நாட்களாக பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 101.40 ரூபாயாகவும், டீசலின் விலை ரூ.91.43-ஆகவும் இருந்தது. அந்த வகையில், 112 வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் அதே விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.