ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து உக்ரைனை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழுவது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா உக்ரேனில் 2 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க ரஷ்யாவின் இந்த அதி பயங்கர தாக்குதல் ராணுவ வீரர்கள் உட்பட தற்போது வரை 130 க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் ரஷ்யா உக்ரேனில் நடத்திவரும் இந்த அதிபயங்கர தாக்குதலில் இருந்து தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கும் அந்நாட்டை சேர்ந்த தந்தையும் சிறுமியும் அழுவது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.