போலீஸ் சூப்பிரண்டு திருடுபோன 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 46 செல்போன்களை மீட்டனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, செல்போன்கள் தொலைந்தாலும் அல்லது யாரேனும் பறித்துச் சென்றாலும் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ரசீது இல்லாமல் குறைந்த விலையில் செல்போன்களை வாங்க கூடாது. அது திருட்டு செல்போன்களாகவோ, குற்ற வழக்குகளில் தொடர்புடைய செல்போன்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த செல்போன்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதனையடுத்து இணைய பண மோசடி குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.