வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்று கொண்டிருக்கும் மற்றொரு வலையில் விழாது என்று நான் தவறாக நம்பிவிட்டேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தற்போது நடந்து வருகிறது. இப்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அமெரிக்கா கடந்த காலங்களில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை.
மேலும் இன்னொரு குழியில் விழுந்து உள்ளது. இதனையடுத்து வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்றும், மற்றொரு வலையில் விழாது என்றும் நான் தவறாக நம்பிவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். இந்த செய்தியை பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது.