Categories
உலக செய்திகள்

“தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்”…. எனக்கு எந்தவித அச்சமும் இல்லை…. விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலையங்கள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்  ரஷ்யா என்னை தான் முதல் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. பின்னர் எனது குடும்பம் தான் அவர்களின் இரண்டாவது இலக்காக உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின்  தலைமையை அழித்து அரசியல் ரீதியாக உக்ரைனை அழைக்க அவர்கள் நினைக்கின்றனர். மேலும் நான் கீவ்  நகரத்திலேயே தான் இருப்பேன். இதனையடுத்து எனது குடும்பத்தினரும் உக்ரைனில் தான் இருக்கிறார்கள். தற்போது ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன்  படைகள் போரிட்டு வருகின்றது. மேலும் நான் உக்ரைனின் தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்” என்று  அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Categories

Tech |