Categories
மாநில செய்திகள்

நகை பிரியர்களே…. சவரனுக்கு ரூ.1,136- குறைந்தது…. உடனே கிளம்புங்க…..!!!!!

சென்னையில் இன்று (பிப்..25) காலை நேர நிலவரப்படி தங்கம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.4,801-க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து 38,408-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு  ரூ.2.70 குறைந்து ரூ.70-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,136 குறைந்தது. மாலை நேரத்தில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1136 குறைந்து, 38,472க்கும், கிராமுக்கு ரூ.142 குறைந்து, ரூ.4809க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 குறைந்து,ரூ.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி 70,000க்கும் விற்பனையாகிறது..

 

Categories

Tech |