சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக முதியவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான தேவராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 1000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாத காலத்திற்குள் 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.