தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கி இருந்த போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தொடக்கக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைத்து வகை ஆசிரியர்கள் பணி நிரவல் / பணி மாறுதல்/ மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த கலந்தாய்வின் போது மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு அரசாணை நிலை எண் 404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நாள் 25/05/1995ன் படி மலைசுழற்சி மாறுதல்களை, இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி அந்த பதவிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள அந்தந்த நாட்களுக்கு முன்னர் மாறுதல் வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பிறகு உரிய இணையவழி கலந்தாய்வினை நடத்திடவும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறைகள் 11/01/2022க்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலைசுழற்சி முறை பின்பற்றபடும் ஒன்றியங்களுக்குள் மட்டும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு அட்டவணையில் உள்ளவாறு இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் 25/02/2022 (நேற்று)முதல் நடைபெறும் கலந்தாய்வுகள் பின் அறிவிக்கப்படும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.