Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கால்நடைகளின் குடற்புழு நீக்க இதை முயற்சி செய்யுங்கள்..

தேவையான பொருட்கள் :-

சீரகம் – 15 கிராம்
பூண்டு – 5 பல்கடுகு – 10 கிராம்
மிளகு – 5
மஞ்சள் தூள் – 65 கிராம்
தும்பை இலை – ஒரு கைப்பிடி
வேப்பிலை – ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு – 100 கிராம்
பாகற்காய் – 50 கிராம்
பனைவெல்லம் – 150 கிராம்

செய்முறை விளக்கம் :-

சீரகம் , கடுகு, மிளகு ஆகியவற்றை  நன்கு இடித்து, அதனுடன் மற்றவைகளையும்  சேர்த்து அரைத்து, பின்பு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். எல்லா உருண்டைகளும் ஒரு மாட்டிற்க்கு கொடுக்கவேண்டும் . ஒரே நேரத்தில் கொடுக்கவேண்டும்.

இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒருமுறை கொடுத்துவந்தால் கால்நடைகளின் குடல்புழுக்கள் நீங்கிவிடும்.

Categories

Tech |