Categories
உலக செய்திகள்

ரஷ்ய வான்வெளியில்…. இங்கிலாந்து விமானங்கள் பறக்க தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ரஷ்ய அரசு, இங்கிலாந்தின் விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறப்பதற்கு தடை அறிவித்திருக்கிறது.

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் பொருளாதார தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அரசு, இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தங்கள் நாட்டில் தரையிறங்குவதற்கும் வான்வெளியில் பறப்பதற்கும் தடை விதித்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விமானங்களுக்குரிய வான்வெளியை ரஷ்யா அடைத்திருக்கிறது. இங்கிலாந்து, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தீர்மானித்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |