Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) தேர்வர்களுக்கு…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம்…. உடனே இதை பண்ணுங்க…..!!!!!

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியானது. அதன்படி  குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த குரூப் 2, குரூப் 2A தேர்வு மே 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசுப் பணியாளர் தேர்வாணையமானது காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகபடுத்தி அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒரு முறை நிரந்தரப் பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் தொடர்பான விபரங்களை (பிப்..28 ஆம் தேதி) இன்னும் 2 நாட்களுக்குள் இணையத்தில் தவறாமல் இணைக்க வேண்டும்.

மேலும் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிப்பின்படி தனது ஒருமுறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தொடர்ப்பன கூடுதல் விபரங்களை அறிய 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது [email protected] /[email protected] மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |