ரஷ்ய அரசு, உக்ரைன் தாக்குதலை நிறுத்திக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருக்கிறது.
ரஷ்யாவின் படைகள் உக்ரைன் நாட்டின் மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து 2-ஆம் நாளாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரைவழி என்று தாக்குதல்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைனின் பெரும்பாலான ராணுவ தளங்கள், ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் உக்ரைன், பதில் தாக்குதல் நடத்துவதால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரியான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, வன்முறையிலிருந்து உக்ரைன் நாட்டை மீட்பது தான், எங்களின் இலக்கு. உக்ரைன் நாட்டின் ராணுவம், தாக்குதலை நிறுத்திக்கொண்டால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.