Categories
உலக செய்திகள்

#BREAKING : உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் – ரஷ்ய அதிபர் புதின்…!!

உக்ரைனுக்குள் நுழைந்து நேற்றுமுதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதல் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதால்  மக்கள் அச்சத்தில் உள்ளனர்.. ரஷ்யா தரை, வான், கடல் வழியாக தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தலைநகர் கீவ் க்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை  அரங்கேற்றி வருகிறது.. பதிலுக்கு உக்ரைனும் தாக்கி வருகிறது..

உக்ரைன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் 30 டாங்கிகள், 7 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் முதல் நாளான நேற்று 137 பேர் உயிரிழந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது

இதற்கிடையே எங்களுக்கு உதவ வேண்டும் என்று உக்ரைன் அரசு பல நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன..

இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்-இல் உக்ரைன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

Categories

Tech |