தமிழகம் முழுவதும் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மின் ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 2 மற்றும் 3 நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் முன்னரே மின்தடைக்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்டங்கள் சார்பாக மக்களுக்கு அறிவிக்கப்படும்.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின்கம்பி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பிப்ரவரி 24 , 25, 26 மற்றும் மார்ச் 1 போன்ற தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெரியகுளம் உபமின் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள தாமரைக்குளம் மின் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தண்டுபாளையம், ஜெ.ஆர்.ஆர் நகர், கம்பம் சாலை, பாரதி நகர், வடுகபட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம்,அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(பிப்..26) காலை 9 மணி முதல் மாலை 4 வரைமின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.