மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள், உமன் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் நேச குமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பெண்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்து போராட்டங்களைக் கையில் எடுத்து வெற்றி பெற்று வருகின்றனர். தற்போது நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனை நான் மிகவும் வரவேற்கிறேன். இந்நிலையில் இயற்கையாவே ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம நிலையில் உள்ளனர். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருப்பினும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.