கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைகுட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர். அதன்பின் உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.