மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.