தலைவலியால் அவதிப்பட்டு வந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியில் நவீன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் நவீன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடையாததால் விரக்தியடைந்த நவீன் சம்பவத்தன்று வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக நவீனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நவீன்குமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்